என்ன பிழைப்பு இது?

றயாகரன் என்னதான் எழுதியிருப்பினும் அது குறித்து றயா நேரடியாகத் தனது கருத்துக்களை,உண்மைகளை நிறுவ வேண்டுமே ஒழியத் தேசம் நெற்றில் ஜெயபாலன் எழுதியதை வைத்துத் தனது கருத்துக்களைச்சீரமைக்க முடியாது.

குகநாதனை எந்த வகையிலுமே நம்புவதற்கான, நாணயமான மனிதனாக ஏற்றுக் கொள்வதற்கில்லை!

எத்தனை பித்தலாட்டம்,இந்தப் பிரச்சனையின் நிமித்தம் அரங்கேறுகிறது-யாரிந்தக் குகநாதன்?

குகநாதனுக்கும் மக்கள் அரசியலுக்கும் என்ன தொடர்பு?

குகநாதன் பிரச்சனையில் நாவலனை உரைப்பது எதன் நோக்கத்திலிருந்து?

இடதுசாரிய அரசியல் பேசும் எவரையும் ஓரங் கட்டுவதென்பது மக்கள்நல-எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையாக இருக்க முடியுமா?

றயாகரன் தனது கட்டுரைக்கான விளக்கங்களைத் தானே தந்து,நாவலன் "கடத்தல்-கப்பம்" கேட்கும் "சமூகவிரோதிதான்" என்று நிறுவ வேண்டும்.

இதை அவர் செய்ய வக்கின்றி இருக்கும் இந்த நேரத்தில்.
தேசம் நெற்றை இதுவரை திட்டித் தீர்த்துவிட்டதை மறந்து சந்தர்ப்வாத அரசியலைத் திட்டமிட்டு நடத்துறார்.

தமிழரங்க றயா தேசம் நெட்டின் கட்டுரையை,பேட்டியை வெட்டி ஒட்டித் தனது கட்டுரைக்குப் பலம்-ஆதாரம் தேடுகிறாரா?

குறித்து றயாகரன் எந்தவுரிமையுடன் தேசம் நெற்றைப் பயன் படுத்துகிறார்?

ஜெயபாலனை இந்திய உளவாளியென்று"அம்பலப்"படுத்திய நேர்மைமிகு றயாவுக்கு தேசம் நெற்றின் உளவு அவசியம்?

"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை"என்று தேசம் நெற்றைத் தனது வங்கோரத்து அரசியலுக்குப் பலமாகப் பயன் படுத்துவதில் கவனம் றயாகரப் புரட்சிக்கு அதிகமாகிறது!
அடப்பாவமே....

இவ்வளவு சந்தர்ப்பவாதியை இதுவரை எவருமே காண முடியாது.றயாகரனுக்குத் தேவை தனது பொய்களை நிலைப்படுத்துவது.அதன்படி எவரையும்- எதையும்,எப்படியும் பயன் படுத்தித் தனது பொய்யை உண்மையாக்குவது.சுப்பர் அண்ணே-சுப்பர்!

என்ன பிழைப்பு இது?

தேசம் நெற்றுக் கட்டுரையை-பேட்டியை வெட்டித் தனது தமிழ் அரங்கத்தில் போடுறவர்,இதுவரை தேசம் நெற்றின் மற்றைய எத்தனையோ நல்ல கட்டுரைகளைப் பேட்டிகளை வெளியிடாதவர்-வெட்டி ஒட்டாதவர் என்பது கவனிக்க வேண்டியது.
றயாவின் அரசியலே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்தர்ப்பவாதம்.இதில வந்து... மற்றவர்களை ஓரம்கட்டுவதற்கு எவருடனும் கூட்டணி...

றயாவைத் தவிர எவருமே இப்படி"புரட்சி"பேச முடியாது-உண்மை பேச முடியாது!

-ரவி

பெண்ணெழுத்தின் மீது

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல்இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன்சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்‘ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்துமக்கள் கட்சி‘ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசாரஅடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:


* இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8

* (எழும்பூர் மியூசியம் எதிரில்)

* நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி


பங்கேற்பாளர்கள் :


அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், சுகிர்தராணி, பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.


எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.


தொடர்புக்கு :

கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்

3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20

பேசி : 94441 20582
———————————————————

*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின்கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Labels: , ,

இருப்பு-லேபிள்.

நிலவு வெறித்துக் கிடக்கிறது.
நிலைத்த பொழுதும் அதற்கு இல்லை
நீலம் போர்த்த திசையில் வெறித்துக்கிடக்கும்
உயிரும் ஒட்ட வெட்டப்பட்ட தலையைத் தேடி

உயிருண்டு விலத்தும் காலம்
வெழுத்க்கட்டும் வளியில்
உதிர்த்துவிடும் உடலம்
எந்தப் புள்ளியில் எடுத்து வைக்கிறது உன்னை?

பட்டதன் தொடரில்
பாழ்பட்ட இருப்பு ஒட்டமுனையும்
லேபிள்கள் எத்தனை நாமத்தோடு...

யாருக்கு வேண்டும் உனது சுய புலம்பல்?

மக்களைச் சொல்லிய
விளம்பரம் வீழ்ந்து வீங்கும் நிலைமறுப்பில்
நீ-நான்...
எல்லாம் சோதனைக் காலத்தின் புள்ளில்
தொடர் ஆரம்பமாகத் திசை வெறுத்து
கட்டாந்தரை வழி பாதாளம் புகுக.

தியாகினி.

Labels: ,

தோழிகளோடு அன்று..

புதிய வானம்.புதிய தெருக்கள்.புதிய மொழி.எல்லாம் எமக்குள் ஒன்றாய்க் குழப்பிக்கொண்டிருந் தது அன்று. நிருபா,பிராங்பேர்ட் ரஞ்சி,மல்லிகா அன்ரி,தேவிகா அக்கா எனச் சொந்தங்கள்.நாங்கள் புதிய குரலாக எமக்காகக் குரல் கொண்டபோது "நமது குரல் ஊதா சக்தி என மலர தயாவும் தோழியானாள்.இன்று எல்லாம் சுருங்கி இருக்கிறது.இராசேஸ் அக்காவின்ர மூச்சேத்தான் எங்கேயும் கேட்குது.

லெச்சுமி அக்கா இருந்து இருந்து எழுதுவது தெரியுது.உமா என்ன ஆனாள்.அம்மா(மல்லிகா அன்ரி)செத்தபின் குடும்பத்தோட மட்டும் வாழும் பொண்ணாக...

எங்களைப் பற்றி எவருக்கு அக்கறை?

நாங்கள் தொலைத்த வாழ்வு,ஈழவிடுதலையும் எண்டுதான் வரலாற்றில பதியவேணும்.எல்லாக் காலத்திலையும் செத்துப்போனவள் பெண்.
அந்தப் பெண் வெளிப்படையாகப் பேசினாத்தான் உண்மை முழுமை பெறும்.
போராட்டம் பற்றியும்,அதில பெண் பங்கு பற்றியும்,புலத்தில இருந்தவை புரட்சி பேசி ஊரை உலகத்துக்கு வித்ததையும்,இப்ப வித்துப்போட்டுத் திரும்ப புரட்சி பேசிகொண்டு எல்லாரையும் மேய்ஞ்சுகொண்டு நிப்பதையும் பேச வேணும்.தோழமை எண்டுறவை யாருக்கோ தூசு தட்டுகினம்.தமிழீழ விடுலையெண்டும்,பெண்விடுதலை,புரட்சி எண்டும்.என்னமோ தெரியாது... எல்லாரும் முண்டியடிச்சுத் திரியினம்.உண்மை தெரிஞ்சதைச் சொல்ல வேணும்.பொறுத்திருங்கோ சொல்லுறன்.

தியாகினி

Labels:

பெண் விடுதலை செய்யட்டாம்!

பேசு.

எங்களுக்குக்
கொண்டையில்
பூவைத்தவர்கள் தோழர்கள் ஆனார்களாம்
அவர்களையும் கேட்டு
பெண் விடுதலை செய்யட்டாம்.

என்னுடைய பெண்மை
இவர்களுக்குப் புரட்சியாம்.
இன்னும்
"கற்பழிப்பு" வகுப்பெடுக்க
பலர்...
புரட்சிக்குள்ள பெண் விடுதலை உண்டாம்!
என்னத்தைச் சொல்ல?

பேசு.
உனது பெண்மையை புரட்சிக்கு
தியாகமாக்கச் சொல்லும் தோழர்கள்
பெண்விடுதலை பேசுவதை நிறுத்தப் பேசு.

தியாகினி

Labels:

ஹாய் பெரியோரே!

எல்லோரும் நலமா?

ஹாய் பெரியோரே,இந்த வலைக் குறிப்புக் கு நான் புதியவள்.ஆனால் தளத்திலும்,புலத்திலும் நான் அறியப்பட்டவள்.
விடுதலைப் போரிலும்ஈபின் பெண்கள் சந்திப்பு,குரலெனப் பரவலாகப் பதியப்பட்டவள்.
வலை பதிந்துவரும் பல தோழிகள்-தோழர்கள் என்னை வரவேற்றபோது எதுவுமே தெரியாத இன்டர்நெட் தொழில்நுட்பத்தோடுதான் உங்களோடு இணைய வருகிறேன்.

இந்த தளத்தில என்னை எழுதச் சொல்லும் தோழிகளுக்கும்,நண்பர்களுக்கும்.நன்றி.

குறிப்பாகத் தோழி ஜெபாவுக்கும்,கௌரிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.இந்த இன்டர் நெட்டில் முன்பே எழுதிவரும் தோழர்கள் எனக்கு வழிகாட்டியாக முடியும்.அவர்களுள்தோழர்கள் பலர்.குறிப்பாக செந்தில் குமரனுக்கு நன்றி சொல்வேன்.எனக்கு,தோழி இராஸேஸ்வரி பாலா அவரின் விடாத துணிச்சல் முன் உதாரணம்.

அவரை எண்ணும்போது பயம் விட்டுப் போய்விட்டது.

தொடர்ந்து எழுதுவேன்.அனுபவங்கள் பல.அது,புலத்திலும் தளத்தில் போராடியதும்,எழுதியதும் என்று...

இன்று "எமது குரல்"வெளிவரவேண்டும்.

ஈழப் போராட்டத்தில் ஆண்சார் அனுபவங்களும்,அவைகளின் வீரப்பிரதாபங்களுமே பரவலாகப் பேசப்படுகிறது.எமது இருப்பு எவராலும் பேசப்படவில்லை.இதுபற்றி எழுதுவது என் நோக்கம்.எங்கள் விடுதலைப் போராட்டத்தின் உள்ளே நாம் இருந்தோம்.அதை நசித்தவர்களும் எமக்குள்ளேதான் இருந்தவை.

இப்போதும் புலத்தில் புரட்சி என்பவர்களும் அதில துணையோடு இருந்தவையள்.நாங்களும் பேசவேண்டும்.
பேசுவேன்.பெண்கள் சந்திப்பில் இதுபற்றி விவாதிப்போம்.இப்போது நான் வருகிறேன்.இனியும் பலர் வருவினம்.இப்போதைக்கு நன்றி.

மீண்டும் சந்திக்கிறேன்,
தியாகினி.

Labels: